உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி

கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணி

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் கழிவுநீர் செல்லும் கால்வாய், துர்வாரும் பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் பாரதிநகர் வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய், துார் வராமல் இருந்தது. மழை காலம் வருவதால், கால்வாயை துார் வார, தொகுதி எம்.எல்.ஏ.,விடம் மக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை அடுத்து, பொதுப்பணித்துறை சார்பில், 3.52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை