உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கழிவுநீர் வாய்க்கால் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

கழிவுநீர் வாய்க்கால் பணி: எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில், கழிவுநீர் வாய்க் காலில், வடிகால் வசதி உடைய மூடி பொருத்தும் பணியை, சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.முதலியார்பேட்டை தொகுதியில், நைனார் மண்டபம், தென்ன சாலையில் அமைந்துள்ள கழிவுநீர் வாய்க்காலில் பழுதடைந்த, 'சிமென்ட் சிலாப்'க்கு பதிலாக 'எம்.எஸ்.கிரேட்டிங்' எனும் உலோகத்தாலான வடிகால் வசதி உடைய மூடியை பொருத்தும் பணி நேற்று காலை நடந்தது.இப்பணியை சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைத் தார். இதன் திட்ட மதிப்பீடு, ரூ.20.38 லட்சம். இந்த பணியை, ஆறு மாதங்களுக் குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.புதுச்சேரி பொதுப்பணித் துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் சங்கர் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை