உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பழனி முருகன் கோவிலுக்கு மினி பஸ் சக்தி முருகன் கம்பெனி வழங்கியது

பழனி முருகன் கோவிலுக்கு மினி பஸ் சக்தி முருகன் கம்பெனி வழங்கியது

புதுச்சேரி: பழனி முருகன் கோவிலுக்கு மினி பஸ்சை புதுச்சேரி சக்தி முருகன் கம்பெனி வழங்கியுள்ளது.அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் பக்தர்களின் வசதிக்காக கிரி வீதிகளில் கோவில் மற்றும் தனியார் பங்களிப்புடன் பேட்டரிகார்கள், மினி பஸ், பேட்டரிபஸ் ஆகியவை இயக்கப்பட்டு வருகிறது.அதன்படி, புதுச்சேரி சக்தி முருகன் கம்பெனி மற்றும் தி சன்வே மேனர் ஓட்டல் நிர் வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக ரூ. 20 லட்சம் மதிப்பிலான பேட்டரி மினி பஸ் நேற்று முன்தினம் கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. இந்த மினி பஸ்சில் 23 பேர் பயணிக்கலாம்.முன்னதாக பழனி பாதவிநாயகர் கோவில் முன், பேட்டரி மினி பஸ்சிற்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் வேல்முருகன், குகன் மற்றும் குடும்பத்தினர் இணைந்து கோவில் துணை ஆணையர் வெங்கடேசனிடம் மினி பஸ்சிற்கான சாவியை வழங்கினர்.இதன் மூலம் கோவில் கிரி வீதி பகுதிகளில் 27 பேட்டரி கார், 8 பேட்டரி பஸ் மற்றும் ஒரு மினிபஸ் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி