மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
28-Sep-2025
புதுச்சேரி : பிள்ளைச்சாவடி, இ.சி.ஆர்., கமல சாய்பாபா கோவிலில், சீரடி சாய்பாபாவின் 107ம் ஆண்டு மகா சமாதி தின வழிபாடு வரும் 2ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு கொடியேற்றம், மூல மந்திர ஹோமம், 8:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு, கலச அபிஷேகம் மற்றும் 108 பன்னீர் குட அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, வேல்முருகன், அன்பரசி ஜெயகுமார் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியும், காலை 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம், 1:30 மணிக்கு சாய் சத்சரித பாராயணம், சாய் நாமஜெபம் மற்றும் ஜோதி வழிபாடு நடக்கிறது. பின்னர், சாய் பக்தர்களால் எழுதப்பட்ட 'சீரடி சாய்பாபாவின் நாமாவளிகள்' பூமியில் அர்ப்பணம் செய்தல், மாலை 6:00 மணிக்கு ஆரத்தி மற்றும் பஜனை நிகழ்ச்சி நடக்கிறது.
28-Sep-2025