உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சிவனடியார்கள் நடைப்பயணம்

திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு சிவனடியார்கள் நடைப்பயணம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலுக்கு, சிவனடியார்கள் நடைப்பயணம் சென்றனர்.புதுச்சேரி, ஒருங்கிணைந்த சிவனடியார்கள், பக்தர்கள் திருக்கூடம் சார்பில் சிவ சிந்தனையோடு சிவனோடு ஒரு நாள் எனும் நோக்கில் ஆண்டுதோறும், நடைப்பயணம் நடந்து வருகிறது.உலக நன்மையை வேண்டி, 4ம் ஆண்டு நடைப்பயணம் புதுச்சேரி, காந்தி வீதி, வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு புறப்பட்டது.இதில், புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.ஒருங்கிணைந்த சிவனடியார்கள் பக்தர்கள் திருக்கூடத்தின் தலைவர் கண்ணன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.நடைப்பயணம் ராஜிவ் சிக்னல், கதிர்காமம், மூலக்குளம், அரும்பார்த்தபுரம் வழியாக வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில், 1:00 மணிக்கு நிறைவு பெற்றது.திருக்காமீஸ்வரர் கோவிலை பக்தர்கள் வந்தடைந்தவுடன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !