உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிவன் கோவில் தேரோட்டம்

சிவன் கோவில் தேரோட்டம்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் சிவசைலநாதர் கோவிலில், 61ம் ஆண்டு, பிரமோற்சவ விழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது.அரியாங்குப்பம் அடுத்த சிவலிங்கபுரத்தில் உள்ள சிவசைலநாதர் கோவிலில், 61ம் ஆண்டு பிரமோற்சவ விழா, கடந்த 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.முக்கிய நிகழ்வான நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை, வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில், முதல்வர் ரங்கசாமி தரிசனம் செய்தார்.சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை