உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  துப்பாக்கி சுடுதல் போட்டி பரிசளிப்பு விழா

 துப்பாக்கி சுடுதல் போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் சார்பில், நடந்த 9-வது மாநில அளவிலான ஷாட்கன் மற்றும் 10-வது மாநில அளவிலான ஏர் ஈவென்ட்ஸ் மற்றும் ஸ்மால் ஆர்ம்ஸ் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசளிப்பு விழா, நேற்று தனியார் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில், புதுச்சேரி துப்பாக்கி சுடுதல் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். ​சிறப்பு விருந்தினராக கூடுதல் கலெக்டர் சுதாகர் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களைவழங்கினார். நிகழ்ச்சியில், சங்கத்தின் செயலாளர் கிஷோர் குமார், பொருளாளர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் ரவீந்திரன், இணைச் செயலாளர்கள்பீர் முகமது, ஜான் ரவீந்திரன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஹென்றி புகழேந்தி, சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !