உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  துப்பாக்கி சுடும் போட்டி துவக்கம்

 துப்பாக்கி சுடும் போட்டி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் துப்பாக்கி சுடும் போட்டி நேற்று துவங்கியது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் வஜ்ரா துப்பாக்கி சுடுதல் விளையாட்டு அகாடமி சார்பில் தென் மாநில வீரர்களுக்கான 6 வது ஓபன் சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி துவக்க விழா நேற்று நடந்தது. போட்டியினை புதுச்சேரி என்.சி.சி., குருப் கமண்டார் கர்னல் அஷிஷ் திவாரி துவக்கி வைக்தார். நிகழ்ச்சியில் பயிற்சி அதிகாரி கர்னல் இமோன் சமந்தா, புதுச்சேரி துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் கோவிந்தராஜன், கிஷோர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அனைத்து வயதிற்கான இப்போட்டியில் கர்நாடாகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி தென் மாநிலங்களில் இருந்து 700 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். நேற்று துவங்கிய இப்போட்டி 14ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை