உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 20 ஆயிரம் குட்கா பறிமுதல்: கடை உரிமையாளர்கள் கைது

ரூ. 20 ஆயிரம் குட்கா பறிமுதல்: கடை உரிமையாளர்கள் கைது

புதுச்சேரி: லிங்காரெட்டிப்பாளையம் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். லிங்காரெட்டிப்பாளையம் அரசு பள்ளி அருகே உள்ள கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த கடைக்கு சென்று சோதனை செய்தனர். கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட ரூ. 19 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின், குட்கா பொருட்ளை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் லிங்காரெட்டிப்பாளையம், தோப்பு வீதியை சேர்ந்த சூர்யா, 27; மீது வழக்கு பதிந்து, கைது செய்தனர். இதேபோல், லிங்காரெட்டிப்பாளையம் பகுதியில் மற்றொரு பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ. 1,200 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, உரிமையாளர் ராஜேந்திரன், 63; மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை