உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கடைகள் ஏலம் நிறுத்தி வைப்பு

 கடைகள் ஏலம் நிறுத்தி வைப்பு

புதிய பஸ் ஸ்டாண்டில், உள்ள கடைகள் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகாரட்சி ஆணையர் பாஸ்கர் கூறியதாவது: புதுச்சேரி நகராட்சி சார்பில், புதுச்சேரி நகராட்சி, பஸ் ஸ்டாண்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகள் மற்றும் உணவகம் செயல்பாட்டிற்கு வரும் பொருட்டு மின்ணனு ஏலத்திற்கு கடந்த மாதம் 14ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் ஏலத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிரப்பித்ததால், வரும் 16ம் தேதி நடக்க இருந்த மின்னணு ஏலம், மறு அறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி