உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்

 எஸ்.ஐ., பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு 129.50 மதிப்பெண் பெற்ற தினகர் முதலிடம்

புதுச்சேரி: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரி போலீஸ் துறையில் காலியாக உள்ள 70 எஸ்.ஐ., பணிக்கு மொத்தம் 18 ஆயிரத்து 205 பேர் விண்ணப்பித்தனர். தகுதியுடைய 16 ஆயிரத்து 472 பேர் உடல் திறன் மற்றும் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் கோரிமேட்டில் நடந்த உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வில் 3,440 ஆண்கள், 802 பெண்கள் என மொத்தம் 4,242 பேர் பங்கேற்றனர். அவர்களில், 1,245 ஆண்கள் மற்றும் 72 பெண்கள் என 1,317 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 22ம் தேதி 4 மையங்களில் நடந்தது. அதில் முதல் தாள் தேர்வை 1,284 பேர், 2ம் தாள் தேரவை 1,282 பேர் எழுதினர். இத்தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது.அதில், ஆண்களுக்கான பொது பிரிவில்-20, எம்.பி.சி-8, ஓ.பி.சி-5, எஸ்.சி-8, இ.பி.சி-1, பி.சி.எம்-1, இடபிள் யூ.எஸ்-4, பெண்கள் பொது பிரிவில்-14, எம்.பி.சி-4, ஓ.பி.சி-2, எஸ்.சி-3 என 70 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கல்வி, வயது, பிறப்பிடம், வசிப்பிடம் மற்றும் சமூக சான்றிதழ்களின் அசல் சரிபார்ப்புக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

முதல் மூன்றிடம்

ஆண்கள் பிரிவில் தினகர் (எம்.பி.சி.,) 129.50; ஹரிஹரன் (எம்.பி.சி.,) 129.25; ஹரிகிருஷ்ணா (ஓ.பி.சி.,) 124.50 மதிப்பெண் பெற்று, பொதுபிரிவில் முதல் மூன்றிடங்களை பிடித்துள்ளனர். இதேபோன்று, பெண்கள் பிரிவில் மோனிகா (ஓ.பி.சி.,) 109.75; வனிதாலட்சுமி (எம்.பி.சி.,) 108.50; அகிலா (எம்.பி.சி.,) 94.50 மதிப்பெண் பெற்று பொது பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

விடா முயற்சியால் சாதனை

நோணாங்குப்பம் அடுத்த இடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஹரிகரன்,24; பட்டதாரி. ஊர்க்காவல்படை தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதம் பணியாற்றினார். பின், தீயணைப்பு வீரர் தேர்வில் தேர்ச்சி பெற்று 8 மாதம் பணியாற்றி வந்தார். இதற்கிடையே, வி.ஏ.ஓ., தேர்வில் தேர்ச்சி பெற்றார். சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வரும் நிலையில், எஸ்.ஐ., பணிக்கான தேர்வும் எழுதினார். அதில், அவர் 129.25 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 2ம் இடம் பிடித்தார். விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் அடுத்தடுத்து தேர்ச்சி பெற்று சாதனை படைத்த ஹரிகரனை பலரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ