மேலும் செய்திகள்
மிஷன் வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
08-Nov-2024
புதுச்சேரி,: புதுச்சேரியில் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் சாலையோர ஆக்கிரமிப்புகள்முளைப்பது தொடர்கதையாகி வருகிறது.புதுச்சேரியில் சாலையோரங்களில், ஆக்கிரமிப்புகள்நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால்போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி, விபத்து அபாயமும் பன்மடங்காக அதிகரித்து வருகிறது.பொதுமக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.இதைத்தொடர்ந்துகலெக்டர் குலோத்துங்கன் சாலையோரஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். புதுச்சேரி முழுவதும் போக்குவரத்து போலீஸ், பொதுப்பணி, வருவாய், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆகிய பல்வேறு துறையை சார்ந்த அதிகாரிகள்இணைந்து கடந்த, 4,ம் தேதியில் இருந்து ஆக்ரமிப்புகளை அகற்றி வருகின்றனர்.இது ஒரு புறம் இருக்க, ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்ட இடங்களை அதிகாரிகள் கண்காணிப்பதில்லை. இதனால், அதே இடங்களில், மீண்டும் கடைகள் முளைப்பது வாடிக்கையாகி வருகிறது.இரு தினங்களுக்கு முன்,மிஷன் வீதியில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளைநகராட்சி, பொதுப்பணி, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து அகற்றினர்.தற்போது, செட்டி கோவிலையொட்டி, மிஷன் வீதியில் நடைபாதையை ஆக்கிரமித்து மீண்டும்கடைகள் முளைத்துள்ளன.இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
08-Nov-2024