சிமிகான் 2026 தேசிய அளவிலான மாநாட்டு மலர் வெளியீடு
புதுச்சேரி: சிமிகான்– 2026 தேசிய அளவிலான மாநாட்டு மலரை தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் வெளியிட்டார். புதுச்சேரி, ஸ்ரீ மூகாம்பிகா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை சார்பில் செயற்கை நுண்ணறிவு மறுவாழ்வு பணிகளில் நுண்ணறிவின் பங்கு என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நல் ஆசியுடன், கடந்த செப்., 26 மற்றும் 27ம் தேதிகளில் சென்னை எழுப்பூரில் உள்ள அசோகா ஓட்டலில் நடந்தது. இதை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி மூகாம்பிகா கல்வி மற்றும் சுகாதார அறக்கட்டளை நிர்வாகிகளை, சென்னை தலைமை செயலகத்திற்கு அமைச்சர் ஆனந்த் வரவழைத்து, சிமிகான்–2026 தேசிய அளவிலான மாநாட்டு மலரை தலைமை தாங்கி வெளியிட்டார். அறக்கட்டளை நிறுவன தலைவர் முத்துக்குமரன் ஞானசேகரன், அறக்கட்டளை அறங்காவலர் அனுஷா முத்துக்குமரன், கல்லுாரி முதல்வர் வேணுகோபால், டாக்டர்கள் பாலகிருஷ்ணன், மனோ அருண், ஞானசேகரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அறக்கட்டளை சார்பாக தமிழக அமைச்சர் ஆனந்திற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அமைச்சர் ஆனந்த், அறக்கட்டளை நிர்வாகிகளிடம் பேச்சு மற்றும் காது குறைபாடு உள்ள குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நடத்தவும், ஆண்டுதோறும் சிமிகான் தேசிய அளவிலான மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் தெரித்தார்.