| ADDED : நவ 22, 2025 05:58 AM
புதுச்சேரி: தி.மு.க., சார்பில் உருளையன்பேட்டை தொகுதியில் அமைக்கப் பட்டுள்ள எஸ்.ஐ.ஆர்., சேவை மையத்தை தொகுதி பொறுப்பாளர் கோபால் பார்வையிட்டார். உருளையன்பேட்டை தொகுதியில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் (எஸ்.ஐ.ஆர்) ஓட்டுத் திருட்டு நடைபெறாமல் இருக்கவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும் தி.மு.க., சார்பில் அண்ணா சிலை அருகேயுள்ள அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர்., சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மையத்தை தொகுதி பொறுப்பாளர் கோபால் நேற்று பார்வையிட்டு, மைய நிர்வாகிகளிடம் மக்கள் எந்தவித சிரமமும் இன்றி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். இதில், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் ஸ்ரீதர், கிளைச் செயலாளர்கள் கிரி, பிரகாஷ், தொகுதி செயற்குழு உறுப்பினர் நெல்சன், இளைஞரணி விக்கி, மாணவர் அணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.