மேலும் செய்திகள்
மூக்கு நுனியில் ஓவியம் வரையும் நாகராஜ்
06-Jul-2025
வில்லியனுார்: சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஓவிய கண்காட்சியை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்து பாராட்டினார். சுல்தான்பேட்டை காயிதே மில்லத் பள்ளியை சேர்ந்த 221 மாணவர்கள் வரைந்த 221 ஓவியங்களை 'பதிவுகள்' என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. கண்காட்சியின் துவக்க விழாவிற்கு விரிவுரையாளர் ராமலிங்கம் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் மோகன் முன்னிலை வகித்தார். சிவா எம்.எல்.ஏ., ஓவியக் கண்காட்சியை திறந்துவைத்து, பார்வையிட்டார். அதனை தொடர்ந்து பள்ளியை சேர்ந்த 10வது மற்றும் பிளஸ் 2 பொதுதேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஓவியம் வரைந்த மாணவர்களையும் பாராட்டி விருது வழங்கினார். பள்ளி வளாகத்தில் தேசத் தலைவர்களின் படங்களை வரைந்த நுண்கலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் நுண்கலை ஆசிரியர்கள் முரு கேசபாரதி, கிருஷ்ணன், அந்தோணியம்மாள், ஆசிரியர்கள் நேரு, ஜெயராக்கினி, அனிதா ஜெனிபர், ராகவன் மற்றும் ஓய்வு பெற்ற துணை முதல்வர் சந்திரா, தலைமை ஆசிரியர் உமா, ஆசிரியர் சுகுமாரன், சுவர் ஓவியம் வரைந்த ஆசிரியர்கள் அன்பழகன், சோமலிங்கம், பழனிவேல் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர். நுண்கலை ஆசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.
06-Jul-2025