உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பள்ளி நுாலகர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 பள்ளி நுாலகர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

புதுச்சேரி: தேசிய அளவிலான பள்ளி நுாலகர்களுக்கு, நுால மேலாண்மை மற்றும் பராமரிப்பு என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. மைசூர் மண்டல கல்வி நிறுவனம் மற்றும் புதுச்சேரி பயிற்சி மையம் இணைந்து, டிஜிட்டல் சூழலில் பள்ளி நுாலக மேலாண்மை மற்றும் பராமரிப்பு என்ற தலைப்பில், லாஸ்பேட்டையில், கடந்த 5ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை 5 நாட்கள் பயிற்சி நடந்தது. பயிற்சியை, தலைமை நுாலகர் ஆகாஷ், மைசூர் மண்டல கல்வி நிறுவன சிறப்பு பயிற்றுனர்கள் நாகராஜா, அனுபமா ஹெக்டே, ஒருங்கிணைப்பாளர் கவராம்மா ஆகியோர் துவக்கி வைத்தனர். பயிற்சியில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 நுாலகர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவு விழாவில், பள்ளி கல்வி இயக்குநர் சிவக்குமார், எழில் கல்பனா, மாநில பயிற்சி மையத்தின் சிறப்பு அதிகாரி சுகுணா ஆகியோர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இன்றைய டிஜிட்டல் கல்வி சூழலில், பள்ளி நுாலகங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளவும், கல்வியில் டிஜிட்டல் மாற்றத்தின் அவசியம் மற்றும் மாணவர்களில் வாசிப்பு பழக்கத்தை வளர்ப்பதில் நுாலகத்தின் பங்கு, அறிவு மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை