உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறுதானிய உணவு திருவிழா

சிறுதானிய உணவு திருவிழா

வில்லியனுார்: புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மற்றும் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியன சார்பில், 'விவசாயிகள் திருவிழா - 2024' வில்லியனுாரில் நடந்தது.புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். காமராசர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் வரவேற்றார்.ஆத்மா திட்ட இயக்குனர்கள் ஜாகிர் உசேன், கலைச்செல்வி, இணை இயக்குனர் சண்முகவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் சிறு தானிய உணவு கண்காட்சி நடந்தது. இதில் சிறுதானிய பீட்சா, கேழ்வரகு கேக், திணை பாயாசம், சோளம் பால்கோவா, கம்பு ரொட்டி, கேழ்வரகு ஐஸ்கிரீம், குதிரைவாலி, சக்கரவள்ளி கிழங்கு கட்லெட், வாழைப்பழ ராகி, கப்கேக் உள்ளிட்ட பல்வேறு சிறுதானிய உணவு வகைகள் இடம் பெற்றன.திரளான விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு ஐந்து வகையான பாரம்பரிய விதை நெல் ரகங்கள் மற்றும் காய்கறி பயிர் இடு பொருட்கள் வழங்கப்பட்டது. துணை இயக்குனர் ஜோசப் ஆல்பர்ட் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை