மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
16-Aug-2025
புதுச்சேரி : ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு சார்பில், மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மேசை, நாற்காலிகள், ஸ்மார்ட் டிவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி சமூகவியல் ஆசிரியர் பாலு வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் செங்கேணிஅம்மாள் பாலாஸ் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக அமைச்சர் தேனீ ஜெயக்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சீருடைமற்றும் 6 மேசைகள், 9 நாற்காலிகள், ஸ்மார்ட் டிவியினைவழங்கினார். கமலக்கண்ணன், செந்தில் , கலியபெருமாள், ரஜினி ஆறுமுகம் , கர்ணன்,வெங்கடாசலம் , ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.கலைச்செல்வன் நன்றி கூறினார்.
16-Aug-2025