மண் வளம் திட்டம் பயிற்சி முகாம்
புதுச்சேரி: வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில் மண் வளம் திட்டம் குறித்த வழிகாட்டுதல் பயிற்சி முகாம் காலாப்பட்டு ஜவகர் நவோதயா பள்ளியில் நடந்தது. துணை வேளாண் இயக்குநர் ஜோசப் ஆல்பர்ட் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் சிவசுப்ரமணி முன்னிலை வகித்தார். காலாப்பட்டு வேளாண் அலுவலர் கோகுலலட்சுமி மண் வளம் பற்றி மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார். வேளாண் அலுவலர் புவனேஸ்வரி, கே.வி.கே., மண்வள நிபுணர் பிரபு, பள்ளி துணை முதல்வர் ஆஷா, ஆதித்தியன் ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை களப்பணியாளர் இளங்கோவன், அலுவலக உதவியாளர் மாதவன் செய்திருந்தனர்.