உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாகூர் மூலநாதர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்

 பாகூர் மூலநாதர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்

பாகூர்: பாகூர் ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, மகா தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கார்த்திகை தீப உற்சவம் நடந்தது. இதனையொட்டி, காலை 7:00 மணிக்கு, மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கோவில் கோபுரத்தின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 7:30 மணிக்கு கோவிலின் முன் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. சந்திரசேகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சுவாமி உள் புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை