சூரிய வீடு மின்சார திட்டம் விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை சார்பில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் விளக்க முகாம் நடந்தது.லாஸ்பேட்டை அசோக் நகர் சமுதாய நலக்கூடத்தில் நடந்த முகாமை மின்துறை அரசு செயலர் முத்தம்மா துவக்கி வைத்தார். இதில், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தலைவர் சண்முகம், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முகாமில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் பொது மக்கள் சேர்வதற்கான வழிமுறைகள், இத்திட்டத்தின் மூலம் வீட்டின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதால், ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.மேலும், அனைத்து வீட்டு மேற்கூரைகளிலும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து, புதுச்சேரியை பசுமை மாநிலமாக மாற்ற வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.