சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம்; நாளை விழிப்புணர்வு முகாம்
புதுச்சேரி; சூரிய மின் உற்பத்தி திட்டத்தில் 3.65 கோடி ரூபாய் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மின் துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:புதுச்சேரி மின் துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமை இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வீட்டு மேற்கூரைகளில் மேல் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க முடியும்.இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், நாளை 1ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெங்கட்டா நகர் சிறுவர் பூங்கா எதிரில் உள்ள தமிழ்சங்கத்தில் நடத்துகிறது.இத்திட்டத்தின் மூலம் இதுவரை 530 மின்நுகர்வோர் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை தங்கள் வீட்டு மேற்கூரைகளில் நிறுவி உள்ளனர். இவர்களுக்கு 3.65 கோடி ரூபாய் அளவிற்கு இந்த திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்பதன் மூலம் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். கூடுதல் விபரங்களுக்கு 94890-80373, 94890-80374 மற்றும் ee2ped.py.gov.inஎன்ற இமெயில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.