சோமவரம் நிகழ்ச்சி
நெட்டப்பாக்கம்: மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவரம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை மரக்காளீஸ்வரர் கோவிலில் சோமவரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 10.00 மணிக்கு மரக்காளீஸ்வரருக்கு இளநீர், தேன், பால் கொண்டு சிறப்பு அபி ேஷகம், ஆராதனைகள் நடந்தது. மாலை 6.00 மணிக்கு சோமவரம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம்,அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மடுகரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏரளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்படுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.