உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நிலம் மோசடி தந்தை மீது மகன் புகார்

நிலம் மோசடி தந்தை மீது மகன் புகார்

புதுச்சேரி: குமராபாளையம் காளிகோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாகுமார், 40. இவரது தந்தை கண்ணனுக்கும், தாய் மங்கலட்சுமிக்கும் கடந்த 1982ம் ஆண்டு திருமணம் நடந்தது. அப்போது, மங்கலட்சுமியின் தந்தை பெருமாள், ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள இடத்தை மங்கலட்சுமி பெயரில் வாங்கி கொடுத்தார். இதனிடையே புற்று நோயால் பாதிக்கப்பட்ட மங்கலட்சுமி கடந்த 2004ம் ஆண்டு இறந்தார். பின், கண்ணன் கடந்த 2007ல் உமா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, தருமாபுரி, தனகோடி நகர் விரிவு, கிருஷ்ணா வீதியில் வசித்தார். இந்நிலையில், மங்கலட்சுமியின் பெயரில் இருந்த நிலத்தை அபகரிக்கும் நோக்கில், அவரது 2வது மனைவி உமாவை, உமா (எ) மங்கலட்சுமி என, போலி ஆவணம் தயாரித்து அடையாளப்படுத்தினார். பின், இறந்துபோன முதல் மனைவி மங்கலட்சுமி உயிருடன் இருப்பதுபோல் உமாவை உழவர்கரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, ஆள்மாறாட்டம் மூலம் மங்கலட்சுமி பெயரில் இருந்த இடத்தை, கடந்த 2023ம் ஆண்டு தனது பெயருக்கு செட்டில்மென்ட் பத்திரம் தயார் செய்து கண்ணன் பதிவு செய்து கொண்டார். இதுகுறித்து ராஜாகுமார் புகாரின் பேரில், கண்ணன், உமா ஆகியோர் மீது ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை