மேலும் செய்திகள்
கணவர் இறந்த சோகம் மனைவி விபரீதம்
03-May-2025
காரைக்கால்,: காரைக்காலில் மூதாட்டி சேமித்து வைத்திருந்த ரூ. 1 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித்தர வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் மகன் கோரிக்கை விடுத்துள்ளார்.காரைக்கால் மாவட்டம், கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 67. இவரது கணவர் 40 ஆண்டுகளுக்கு முன், இறந்த நிலையில், விஜயலட்சுமி தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டு வேலை செய்து காப்பாற்றி வந்தார்.அவர் சம்பாதித்த பணத்தை, பீரோவில் பத்திரமாக சேமித்து வைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன், விஜயலட்சுமி உடல்நலம் குறைவால் உயிரிழந்தார்.அதையடுத்து, அவரது தாய் வைத்திருந்த பீரோவை மகன் சாமிநாதன் திறந்து பார்த்த போது, அதற்குள் பழைய 500, 1,000, 2,000 ரூபாய் நோட்டுகள் என, ரூ.1 லட்சம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின், பழைய ரூபாய் நோட்டுக்களை புதிய நோட்டாக மாற்றி தரக் கோரி நேற்று மாவட்ட நிர்வாகத்திடம் சாமிநாதன் கோரிக்கை வைத்தார்.தனது தாய் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதே என, மகன் வேதனை தெரிவித்தார்.
03-May-2025