மேலும் செய்திகள்
மாஜி படை வீரர்கள் குறைகேட்புக் கூட்டம்
10-Jul-2025
புதுச்சேரி : புதுடில்லியில் நடந்த தேசிய முன்னாள் வீரர்கள் ஒருங்கிணைப்பு குழு செயற்குழுவில் பங்கேற்ற மத்திய படைவீரர்கள் நலவாரிய செயலாளர் (கேந்திரிய சைனிக் போர்ட்) பிரிகேடியர் பசேராவிற்கு, புதுச்சேரி நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர். புதுடில்லியில் தேசிய முன்னாள் வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்த இந்த கூட்டத்தில், மத்திய படைவீரர்கள் நலவாரிய செயலாளர் (கேந்திரிய சைனிக் போர்ட்) பிரிகேடியர் பசேரா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவரை, புதுச்சேரி முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கம் சார்பில் தலைவர் மோகன் சந்தித்து நினைவு பரிசு வழங்கினார். பொது செயலாளர் செல்வமணி, அகில இந்திய சேர்மன் ஜெகன்ரெட்டி உட்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
10-Jul-2025