மேலும் செய்திகள்
ரூ. 2.16 கோடியில் சாலை பணி
10-Mar-2025
அரியாங்குப்பம்: நோணாங்குப்பத்தில், போர்வெல் அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். அரியாங்குப்பம், ராதாகிருஷ்ணன் நகர், தந்தை பெரியார் நகர் ஆகிய பகுதிகளுக்கு 20 லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறையால், மேலும், நீர் ஆதாரங்களை சேகரிக்கும் வகையில் 36 லட்சம் மதிபில், நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆற்றின் வடக்கு பகுதியில், போர்வெல் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இந்த பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் கமிஷனர் ரமேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வன், செயற்பொறியாளர் உமாபதி, உதவிப் பொறியாளர் ஸ்ரீதரன், இளநிலைப் பொறியாளர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
10-Mar-2025