உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை அமைக்கும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில் 16.75 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை அமைக்கும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.மணவெளி தொகுதி, தவளக்குப்பம் காந்தி நகரில் சாலை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். அப்பகுதியினர் தொகுதி எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்ததன் பேரில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 16.75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலைப் பொறியாளர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !