உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாலை அமைக்கும் பணி :சபாநாயகர் துவக்கி வைப்பு

சாலை அமைக்கும் பணி :சபாநாயகர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் துவக்கி வைத்தார். புதுச்சேரி நகராட்சி மூலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், உப்பளம் தொகுதி வாரணரப்பேட்டை சித்தி விநாயகர் கோவில் தெரு மற்றும் உள் தெருக்களுக்கு 16 லட்சத்து 41 ஆயிரத்து, 423 ரூபாய் மதிப்பில், சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகராட்சி உதவி பொறியாளர் யுவராஜ், இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம், ஆய்வாளர் ரவி, ஊர் பிரமுகர்கள் ஜெயராமன், குமார், விட்டல், சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை