உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மத்திய அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு

மத்திய அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு

புதுச்சேரி : புதுச்சேரி சபாநாயகர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, மாநிலத்தில் உள்ளவர்களுக்கு ஜிப்மரில் முன்னுரிமை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வைத்தார். டில்லிக்கு சென்ற, புதுச்சேரி சபாநாயகர் செல்வம், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது, பாஸ்கர் எம்.எல்.ஏ., மாநில பா.ஜ., செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பின் போது, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இதனால் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுகின்றனர்.அந்த நோயாளிகள், ஜிப்மர் மருத்துவமனையில் எளிதாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஏற்கனவே புற நோயாளிகள் பதிவு பிரிவில், தனியாக பதிவு பிரிவு இயங்கி வந்தது. தற் போது அந்த பிரிவு நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நோயாளிகளுக்கு எளிதாக மருத்துவ சிகிச்சை பெரும் வகையில் மீண்டும் புற நோயாளிகள் பிரிவு தனி பதிவு கவுன்டர் திறக்க வேண்டும்.மேலும், மாநிலத்தில் உள்ள சுகாதார துறையை மேம்படுத்துவதற்கும், அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை தரத்தை உயர்த்துவதற்கும், கூடுதலாக 100 சதவீத மானிய நிதி ஒதுக்க வேண்டும் என, சபாநாயகர் கோரிக்கை வைத்தார்.இது குறித்து பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை