மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் கோவிலில் கருட சேவை
3 hour(s) ago
கடலுார் சாலை மோசம் பொதுமக்கள் கடும் அவதி
3 hour(s) ago
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
7 hour(s) ago
புதுச்சேரி: தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகரை, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் செல்வம் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது, தமிழக கவர்னரிடம் இளைஞர் ஐக்கிய திருவிழா – 2026 விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழை முன்னாள் சபாநாயகர் செல்வம் வழங்கினார். அப்போது விழாவில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்களது சாதனைகளுக்காக விருதுகளை பெற உள்ளனர். மாணவர்களின் சாதனை, திறமை, தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் இவ்விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு தமிழக கவர்னரிடம் கேட்டுக் கொண்டார். முன்னாள் சபாநாயகர் செல்வத்திற்கு, தமிழக கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் ஆர்லேகர் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்தினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
7 hour(s) ago