மேலும் செய்திகள்
தீபாவளி மளிகை தொகுப்பு முதல்வர் துவக்கி வைப்பு
01-Nov-2026
புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் அரசின் தீபாவளி மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் பணியை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் துவக்கி வைத்தார். குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவப்பு மற்றும் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் தொகுதி வாணரப்பேட்டை, நேதாஜி நகர், வம்பாகீரப்பாளையம், பெரியப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் நடந்தது. தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமை தாங்கி, மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்கினார்.
01-Nov-2026