உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கூடுதல் நிதி சபாநாயகர் செல்வம் கோரிக்கை

இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கூடுதல் நிதி சபாநாயகர் செல்வம் கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரியில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தரம் உயர்த்த வேண்டும் என மத்திய தொழிலாளர் வேலைலவாய்ப்பு அமைச்சரிடம் சபாநாயகர் செல்வம் வலியுறுத்தினார்.டில்லி சென்ற சபாநாயகர் செல்வம் மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சூக் மாண்டாவியாவை சந்தித்து பேசினார்.அப்போது புதுச்சேரியில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். இ.எஸ்., மருத்துவமனையை விரிவுப்படுத்தி அனைத்து விதமான மேம்பட்ட சிகிச்சையை கொண்டு வரவேண்டும்.இ.எஸ்.ஐ., மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் மன்சூக் மாண்டாவியா உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை