மகா விஷ்ணுவிற்கு சிறப்பு அபிஷேகம்
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, மகா விஷ்ணுவிற்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில், நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி, மேற்கு திசை பார்த்து அருள்பாலித்து வரும் மகா விஷ்ணுவிற்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இதனையொட்டி, காலை 4:30 மணிக்கு, சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.