உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புற்று நோயை கண்டறிய சிறப்பு பஸ்

புற்று நோயை கண்டறிய சிறப்பு பஸ்

புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவ மனை, ரோட்டரி கிளப்பு டன் இணைந்து பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டறிய நவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு ஆய்வு மொபைல் பஸ் சேவை துவக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவிற்கு, மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி, ஆய்வு மொபைல் பஸ்சினை திறந்து வைத்தார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், துணை செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் காக்னே, கல்வித் துறை டீன் கார்த்திகேயன், ஆராய்ச்சி டீன் சஞ்சய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் பாலாஜி, மணிஷ், மாவட்ட ஆளுநர் லியோன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் பெண்களுக்கான புற்றுநோய்களை நேரத்தில் கண்டறிய இந்த மொபைல் யூனிட் மிக நவீன உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறம் மற்றும் புற நகர்ப் பகுதிகளில் வசிக்கும் மகளிருக்கு விரைவில் சோதனை செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை