உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம்

 வாக்காளர் பட்டியல் திருத்த பணி ஓட்டு சாவடிகளில் சிறப்பு முகாம்

புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்காக அனைத்து ஓட்டு சாவடிகளிலும் இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேர்தல் ஆணைய உத்தரவின்படி புதுச்சேரி மாநிலத்தில், கடந்த 28 ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. அதனையொட்டி கடந்த 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கி, பூர்த்தி செய்து திரும்ப பெற்று வருகின்றனர். இந்நிலையில் வாக்காளர்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான இன்று 22ம் தேதி மற்றும் நாளை 23ம் தேதி ஆகிய இரு தினங்களிலும் வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான சிறப்பு முகாம்கள் லாஸ்பேட்டை, காலாப்பட்டு, நெல்லித்தோப்பு மற்றும் முதலியார்பேட்டை தொகுதியை தவிர்த்த பிற தொகுதிகளில் உள்ள அனைத்து ஓட்டச்சாவடிகளிலும் நடக்கிறது. வாக்காளர்கள், இந்த சிறப்பு முகாம்களில் பங்கேற்று, அங்குள் ஓட்டுச்சாவடி அலுவலரிடம் தங்களின் கணக்கெடுப்பு படிவங்களை வாங்கி, உரிய தகவல்களை பதிவு செய்து அவரிடமே சமர்ப்பிக்கலாம். லாஸ்பேட்டை, காலாப்பட்டு, நெல்லித்தோப்பு மற்றும் முதலியார்பேட்டை தொகுதிகளில் நாளை 23ம் தேதி மட்டும் சிறப்பு முகாம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை