உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருபுவனையில் சிறப்பு துப்புரவு முகாம் உள்ளாட்சித்துறை இயக்குனர்ஆய்வு

திருபுவனையில் சிறப்பு துப்புரவு முகாம் உள்ளாட்சித்துறை இயக்குனர்ஆய்வு

குப்பைகளை உடனே அகற்ற உத்தரவுதிருபுவனை: திருபுவுனை பகுதியில் நடந்த சிறப்பு துப்புரவு முகாமை புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல் நேரில் சென்று ஆய்வு செய்து, தேங்கிய குப்பைகளை உடன் அகற்ற உத்தரவிட்டார்.புதுச்சேரி முழுதும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் கீழ் பணியாற்றும் கிராமப்புற துப்புரவு தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட நிறுவனம் சரிவர ஊதியம் வழங்கப்படாததால், குப்பைகள் அகற்றும் பணியில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டது. அந்த வகையில் திருபுவனை பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்கிக் கிடந்தது.இந்நிலையில், புதுச்சேரி உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் தேங்கி உள்ள குப்பைகளை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இயக்குனரின் உத்தரவின்பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் கொம்யூன் துப்புரவு தொழிலாளர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இணைந்து சிறப்பு துப்புரவு முகாம் மூலம் குப்பைகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதகடிப்பட்டில் நடந்த சிறப்பு துப்புரவு பணியை உள்ளாட்சித் துறை இயக்குனர் சக்திவேல் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பொழுது அங்கு பணி செய்த துப்புரவு தொழிலாளர்களை அழைத்து குப்பைகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக அகற்ற உத்தரவிட்டார். அப்போது மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உள்ளாட்சித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை