பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் படிப்பிற்கு சிறப்பு கவுன்சிலிங் நாளைக்குள் விருப்பத்தை கொடுக்க அறிவுறுத்தல்
புதுச்சேரி: பி.எஸ்சி., நர்சிங். பி.பார்ம் படிப்பிற்கு சிறப்பு கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ள சென்டாக் நாளைக்குள் விருப்பத்தை கொடுக்க அறிவுறுத்தியுள்ளது.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கான கவுன்சிலிங் காலக்கெடு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இப்படிப்புகளுக்கு சிறப்பு கவுன்சிலிங் நடத்த சென்டாக் முடிவு செய்துள்ளது. சிறப்பு கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்களுடைய நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இல்லாத டேஷ்போர்ட்டில் நுழைந்து வரும் நாளை 27 ம் தேதி மதியம் 2 மணிக்குள் விருப்பம் தெரிவிக்க வேண்டும்.இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க விரும்பும் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் ஏற்கனவே சீட் எடுத்து சேர்த்திருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவம்
இதேபோல் முதுநிலை எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி, வரைவு முறையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆட்சேபனை இருந்தால் இன்று 26ம் தேதி மதியம் 2 மணிக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். சேர்க்கை கடிதத்தை நாளை 27 ம் தேதி முதல் டவுண்லோடு செய்து கல்லுாரியில் சேரலாம். அடுத்த மாதம் 4ம் தேதிக்குள் சீட் கிடைத்த கல்லுாரியில் சேர வேண்டும்.