உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாண்டி ராம் தங்க நகை மாளிகையில் அக் ஷய திரிதியை பிரத்யேக கவுன்டர் திறப்பு

பாண்டி ராம் தங்க நகை மாளிகையில் அக் ஷய திரிதியை பிரத்யேக கவுன்டர் திறப்பு

புதுச்சேரி : பாண்டி ராம் தங்கநகை மாளிகையில் அக் ஷய திரிதியை முன்னிட்டு, தங்க நாணயங்களுக்கென்று பிரத்யேக கவுன்டர் நேற்று துவங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி, நேரு வீதியில் பாண்டி ராம் தங்க நகை மாளிகை அமைந்துள்ளது. இங்கு, தங்க நாணயங்களை செய் கூலி, சேதாரம் முற்றிலும் இல்லாமல் வாங்கி கொள்ளலாம். மேலும், தங்க நகைகளுக்கு இதுவரை இல்லாத வகையில் மிக குறைந்த சேதாரம் மட்டுமே.இந்தாண்டு, பாண்டி ராம் தங்க நகை மாளிகையில் பொன் குவியும் அக் ஷய திரிதியை முன்னிட்டு, வாடிக்கையாளர்களின் வசதிக்காக, தங்க நாணயங்களுக்கென்று பிரத்யேக கவுன்டர் அண்ணா சாலை, ரங்கப்பிள்ளை வீதி சந்திப்பு, எண் 294ல், நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. தங்க நாணயங்களுக்கான பிரத்யேக கவுன்டர் வரும் 30ம் தேதி வரையில், காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும்.தங்க நகை சிறுசேமிப்பு திட்ட தவணைகளை, இந்த கவுன்டரில் செலுத்தலாம். அக் ஷய திரிதியை முன்னிட்டு, பாண்டி ராம் தங்க நகை மாளிகையின் கைராசியுடன், அதிர்ஷ்டத்தையும் சேமிப்பையும் வீட்டிற்கு கொண்டு செல்ல வாருங்கள் என, ராம் தங்க நகை மாளிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை