உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மண்ணாடிப்பட்டில் சிறப்பு மருத்துவ முகாம் 

மண்ணாடிப்பட்டில் சிறப்பு மருத்துவ முகாம் 

திருபுவனை : திருபுவனையில் உள்ள மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தின் சார்பில் துாய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்நேற்று நடந்தது.கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையேற்று முகாமை தொடங்கி வைத்தார். உதவிப்பொறியாளர் மல்லிகார்ஜூணன் வரவேற்றார் மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் மருத்துவர்கள் எழில்ராஜன், நவீன், சிவஸ்ரீதர், தனவேந்தன் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வச்சாலா, நாகராஜ், மணிமாறன், ராஜ் குமார், ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கினர்.முகாமில் தூய்மைப் பணியாளர்கள், மகளிர் சுய குழுவினர் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் லதா மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர் முகாமிற்கான ஏற்பாடுகளில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ