உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு மருத்துவ முகாம்

சிறப்பு மருத்துவ முகாம்

அரியாங்குப்பம் : அரியாங்குப்பத்தில் நடந்த, பெண்களுக்கான சிறப்பு மருத்து முகாமை, பாஸ்கர் எல்.எல்.ஏ., துவக்கி வைத்தார். சுகாதார மற்றும் குடும்ப நலவழித்துறை சார்பில், பெண்களுக்கான சிறப்பு முகாமை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். சுகாதாரத்துறை தடுப்பூசி பிரிவு துணை இயக்குனர் உமாசங்கர், குடும்பநலத்துறை இணை இயக்குனர் அனந்தலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், நீரிழிவு, ரத்த அழுத்தம், காச நோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து, மருத்துவர்கள் ஆலோனை வழங்கினர். தொடர்ந்து, இலவச மருத்துவ காப்பீடு அட்டை, சுகாதார அடையாள அட்டை எண் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், டாக்டர்கள் பாக்கியபிரியா, சரண்யா, சுமித்ரா, பிரியதர்ஷினி செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை