உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  விக்சித் பாரத் யுவா கனெக்ட் திட்ட சிறப்பு நிகழ்ச்சி

 விக்சித் பாரத் யுவா கனெக்ட் திட்ட சிறப்பு நிகழ்ச்சி

புதுச்சேரி: இந்திராகாந்தி மருத்துவக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் என்.எஸ்.எஸ்., சார்பில், விக்சித் பாரத் யுவா கனெக்ட் திட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. விக்சித் பாரத் யுவா கனெக்ட் திட்டமானது, இந்திய இளைஞர்களை சக்தி வாய்ந்தவர்களாக மாற்றி, நாட்டின் வளர்ச்சி பயணத்தில் இணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதன் சிறப்பு நிகழ்ச்சி, இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. மருத்துவமனை டீன் ராமச்சந்திரபட் வரவேற்றார். இயக்குனர் உதய்சங்கர் நிகழ்ச்சியை, துவக்கி வைத்தார்.அரவிந்தன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், மருத்துவர்கள், பேராசிரியர்கள், 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.என்.என்.எஸ்., திட்ட அலுவலர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை