மேலும் செய்திகள்
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
25-Oct-2024
பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், கார்த்திகை மாத அஷ்டமியையொட்டி, காலபைரவருக்கு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.அதையொட்டி மூலநாதர், வேதாம்பிகையம்மன், பாலவிநாயகர், முருகர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு கால பைரவருக்கு, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபி ஷேகம், உலக நன்மை வேண்டி அஷ்ட பைரவ ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
25-Oct-2024