மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி பூஜை
17-Aug-2025
புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள காளதீஸ்வரர் கோவிலில் உள்ள காலபைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, பைரவருக்கு விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வடை மாலை அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
17-Aug-2025