உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதல்வர் பிறந்த நாள் விழா காரைக்காலில் சிறப்பு பூஜை

முதல்வர் பிறந்த நாள் விழா காரைக்காலில் சிறப்பு பூஜை

காரைக்கால்: காரைக்காலில், முதல்வர் ரங்கசாமி பிறந்த நாள் விழா, அமைச்சர் திருமுருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஏழைமாரியம்மன் கோவிலில் அமைச்சர் திருமுருகன் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நேரு நகரில் உள்ள சிறுவர் காப்பக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து திருப்பட்டினத்தில் என்.ஆர்.காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் முன்னிலையில் பொதுமக்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி