உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

 பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நெட்டப்பக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி, காலை பெருமாளுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, மாலை 6:30 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் வரும் 16ம் தேதி மார்கழி மாத பிறப்பு விழா, 19ம் தேதி அனுமன் ஜெயந்தி விழா, 30ம் தேதி அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை