உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்

 வாக்காளர் திருத்த சிறப்பு முகாம்

புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் தீவிர திருத்த சிறப்பு முகாம் இன்று (16ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: லாஸ்பேட்டை, காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகள் தங்களது பகுதிக்குரிய ஓட்டுச் சாவடிகளில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளனர். முகாமில் இதுவரை சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கெடுப்பு படிவங்களை பெறாத வாக்காளர்கள் தங்களது ஓட்டுச்சாவடியில் இருக்கும் ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளிடம் படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவங்களை சமர்ப்பிக்கலாம். அனைத்து வாக்காளர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ