மேலும் செய்திகள்
சுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவக்கம்
03-Nov-2024
முருகர் கோவில்களில் கந்த சஷ்டி விழா
08-Nov-2024
புதுச்சேரி: மொரட்டாண்டி, சனீஸ்வரர் கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு, வள்ளி தேவசேனா சமேத சண்முக சுப்ரமணியசுவாமிக்கு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, காலையில், கணபதி பூஜை, மூலமந்திர ேஹாமம், மகா பூர்ணாஹூதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், முருகப்பெருமானுக்கு 108 லிட்டர் பால், தயிர் உள்ளிட்டவைகளால் அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, தங்கக்கவசம் சாற்றி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, சத்துரு சம்ஹார சுப்ரமணிய சுவாமிக்கு, 6 சிறுவர்களை கொண்டு, 6 விதமான பழங்கள், இனிப்புகள், காரம், சுண்டல், பிரசாதம் உள்ளிட்டவைகளால் நிவேதனம் செய்யப்பட்டு, தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஆலய நிறுவனர் கீதாராம குருக்கள், கீதா சங்கர குருக்கள், மகேஸ்வரி கீதா ராம குருக்கள், ஸ்ரீவித்யா கீதா சங்கர குருக்கள், கீதாமாலினி, ஆசிரியர் ரமேஷ் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை, அசோக் மற்றும் ஸ்ரீகண்ட சர்மா ஆகியோர் மேற்கொண்டனர்.
03-Nov-2024
08-Nov-2024