உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா 

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா 

புதுச்சேரி: புதுச்சேரி கல்வே காலேஜ் அரசு ஆண்கள் பிரெஞ்சு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை செங்கேணியம்மாள் பாலாஸ் தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் ராஜன் ஜார்ஜ் வரவேற்றார். பெண் கல்வி துணை இயக்குனர் சிவராம ரெட்டி, விளையாட்டு துறை துணை இயக்குனர் வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்று, பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். தொடர்ந்து, கடந்த ஆண்டு வகுப்பு வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியர் ஜவஹர் பத்மநாபன் ஆண்டறிக்கை வாசித்தார். நூலக ஆசிரியை கீதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ