உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

புதுச்சேரி: சின்ன கரையாம்புத்துார், அரசு தொடக்கப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பள்ளி துணை ஆய்வாளர் அமல்ராஜ் லீமாஸ் வாழ்த்தி பேசினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி விஜயலட்சுமி, மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !